Jeewa Ootru

கடவுளின் துகளை கண்டறிய முடியவில்லை-விஞ்ஞானிகள் தவிப்பு        ஆசிரியர்.சுவி.D. விமலன்

கடைசி நாட்களில் அறிவு பெருகிப்போம் என்ற தானியேல் தீர்க்கரின் முன்னுரைப்பின் படி இன்று மனிதனுடைய விஞ்ஞான வளர்ச்சி அபரிமிதமாக பெருகிப்போய் உள்ளது,
ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றை தேடிக்கொண்டிருக்கிறான், அவனுடைய தேடல் எவ்வளவு தூரம் வளர்ந்துள்ளது என்றால், கடவுளின் படைப்பின் மூலத்தை எப்படியாகிலும் கண்டறிந்து விட வேண்டும் என்கிற அளவிற்கு அவனுடைய தேடல் நீண்டுள்ளது என்றால் பாருங்களேன்.
விஞ்ஞானிகளின் கருத்துப்படி இவ்வண்ட பிரபஞ்சம் ஒரு பெரிய வெடிப்பிலிருந்து(Big-Bang theory) தோன்றியது என்றும் அந்த பெரிய வெடிப்பிற்கு இறைவன் பயன்படுத்திய மூலக்கூற்றை அல்லது கடவுளின் துகளை(God Particle) எப்படியாகிலும் கண்டுபிடித்து விட வேண்டும் என்று கடந்த பத்து ஆண்டுகளாக மிகுந்த பிரயாசம் எடுத்து வருகிறார்கள். இந்த கடவுளின் துகளே அணுவின் கட்டமைப்புக்கு மூலப்பொருளாக இருக்க வேண்டும் என்று கருதி அதை கண்டறிய முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்,
1998 ஆம் ஆண்டு முதல் லார்ஜ் ஹார்டன் கோலிட்டர் என்ற ஐரோப்பிய நிறுவனம் இரு பிரிவு விஞ்ஞானிகளைக் கொண்டு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர், இவர்கள் ஐரோப்பாவின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பூமிக்கடியில் சில கிலோ மீட்டர்கள் இடைவெளியில் பெரிய பாதுக்காப்பான சுரங்கத்தை உண்டுபண்ணி மிகப்பெரிய அணு வெடிப்பை ஏற்படுத்தி அணுவின் மூலத்தை கண்டுபிடித்துவிட்டால் படைப்பின் பல இரகசியங்களை உலகத்து தெளிவு படுத்தி விடலாம் என்று முதல் அணு மோதலை ஏற்படுத்தினர், ஆனால் அதில் அவர்கள் எதிர்பார்த்த முடிவை அவர்களால் எட்ட இயலாமல் அந்த சோத்னை முயற்சி தோல்வியில் முடிந்ததாக அறிவித்தனர், அதன் பின்னர் பலத்த எதிர்ப்பை மீறி மீண்டும் அணு வெடிப்பை உண்டுப்பண்ணி கடந்த 2012 நவம்பர் மாதத்தில் இத்தாலியிலுள்ள மோரியாந்த் என்ற இடத்தில் என்ற இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அணு மூலத்தை அல்லது கடவுளின் துகளை கண்டறிந்துவிட்டதாக செய்திகளில் பரபரப்பாக அறிக்கை வெளியிட்டனர், உலகமே பரபரப்புக்குள்ளாகியது.
ஆனால தற்போது விஞ்ஞானிகள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர், தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளனர், கடவுளின் துகளை தங்களால் கண்டறிய இயலவில்லை என்று மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
(ஆதாரம் : மாலை மலர் 15-03-2013)
கடவுளின் படைப்பின் மூலத்தை ஒரு மனிதன் கண்டறிந்து விட்டால் கடவுளின் சக்தி மனிதனுக்கு தேவையற்றதாக மாறிவிடும், நான் அறிந்த வரையில் மனிதன் அதனைக் கண்டறிய இயலாது என்று உறுதியாக நம்புகிறேன்.அபப்டியே சொன்னாலும் அது புருடாவாகத்தான் இருக்கும்
ஏசாயா 29:14 :… “அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகளின் விவேகம் மறந்துபோகும் என்று ஆண்டவர் சொல்கிறார்.” 

1கொரிந்தியர் 3 :19 : ” இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாக பைத்தியமாயிருக்கிறது.”

சங்கீதம் 2:4 ” பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்
This website was built using N.nu - try it yourself for free.    (Click here to renew the premium)(info & kontakt)