ஜோர்டானில் கண்டெடுக்கப்பட்ட 70 உலோக வேதாகமம் சார்ந்த புத்தகங்கள்
பரிசுத்த வேதாகமத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த சவக்கடலில் தோல் கையெழுத்து பிரதிகள் வேதாகமத்திற்கு மிகப்பெரிய பொக்கிஷமாக திகழ்ந்து வருகிறது. அதைப்போல தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த 70 உலோக புத்தகங்கள் சவக்கடல் கண்டுபிடிப்புக்கு பின் கிடைக்கப்பெற்ற அரியதொரு விலையேறப்பெற்ற பொக்கிஷமாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இந்த பழங்கால புத்தகங்கள் ஆதிகால கிறிஸ்தவத்தை உலகத்தால் புதைக்கப்பட்ட சில உண்மைகளை வெளிக்கொண்டு வருவதாக அமையும் என்றும் கருதுகின்றனர்.
இந்த உலோக புத்தகத்தின் பக்கங்கள் கிரெடிட் கார்டை காட்டிலும் பெரிதாக காணப்படவில்லை, அது முழுவதும் படிமப்படங்கள், குறியீடுகள்(symbols) மற்றும் வார்த்தைகளால் நிறைந்துள்ளது. அவை எல்லாமே மேசியாவை உலகுக்கு வெளிப்படுத்தும் மையக்கருவாகவே அமைந்துள்ளது. இன்னமும் சொல்லப்போனால் கிறிஸ்து இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
இந்த உலோக புத்தகங்கள் ஜோர்டானிலுள்ள தொலைதூர பின் தங்கிய பகுதியை சேர்ந்த ஒரு குகையில் 5 ஆண்டுகளுக்கு முன்னதாக கண்டெடுக்கப்பட்டுள்ளது, கி.பி 70ல் எருசலேம் ரோமர்களால் அழிக்கப்பட்டபோது அங்கிருந்து தப்பிய கிறிஸ்தவ அகதிகள் ஜோர்டானின் இந்த குகை பகுதிகளில் மறைந்து வாழ்ந்துள்ளனர். அவர்கள் இந்த குகையில் விட்டுச்சென்ற புத்தகங்க்ளே இந்த 70 உலோக புத்தகங்கள், இந்த 70 புத்தகங்களை துவக்க உலோகவியல் சோதனைக்கு உட்படுத்தியபோது அவைகளில் சில கி.பி முதலாம் நூற்றாண்டை சேர்ந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த பழங்கால புத்தகங்கள் மற்றும் வரலாற்று ரீதியிலான அகழ்வாராய்ச்சி நிபுணர் டேவிட் எல்கிங்க்ஸ்டன் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட புத்தக்ங்களில் சில் கிறிஸ்தவ வரலாற்றில் ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜோர்டானிய அரசு இந்த கண்டுபிடிப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து அதை பாதுகாக்கவும் அதன் சொந்த தேசத்திற்கு அனுப்பவும் தீவிரம் காட்டினர்.
ஆம் பிரியமானவர்களே! கிறிஸ்தவம் ஒரு கட்டுக்கதையோ வெறும் புராணக்கதையோ அல்ல, கிறிஸ்தவம் சத்தியமானது, காரணம் கிறிஸ்து இயேசுவே சத்தியம். இன்னமும் மனதை கடினப்படுத்தாமல் இந்த மெய் தெய்வத்தை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள். இயேசு மதத்தை பரப்ப வரவில்லை , அவரே மார்ககமாக அல்லது வழியாக வந்தார், இந்த அன்பே உருவான ஆண்டவரை நீங்கள் ஏற்றுக்கொள்ள ஆயத்தமா???
இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் (யோவான் 14:6)